Monday, December 25, 2023

Veg Feast

 

 

 

பொரியல் 

அவரைக்காய் பொரியல் 

https://www.youtube.com/watch?v=3sgndBS05KU&list=PLqzV61XhgdiPMTNYnEShLIT1mR1avfRDQ&index=7&pp=gAQBiAQB

 

https://www.youtube.com/watch?v=XzEohd6hbF8&list=PLqzV61XhgdiPMTNYnEShLIT1mR1avfRDQ&index=8&pp=gAQBiAQB

 

வாழைக்காய் பொரியல் 

https://www.youtube.com/watch?v=JLeQDXWnGAg&list=PLqzV61XhgdiPMTNYnEShLIT1mR1avfRDQ&index=10&pp=gAQBiAQB

 

https://www.youtube.com/watch?v=aeGSa-ehvjA&list=PLqzV61XhgdiPMTNYnEShLIT1mR1avfRDQ&index=9&pp=gAQBiAQB

 

ஊறுகாய் - மிளகாய் தொக்கு 

https://www.youtube.com/watch?v=2-afS7fc2Z4&list=PLqzV61XhgdiPMTNYnEShLIT1mR1avfRDQ&index=3&t=20s&ab_channel=VenkateshBhat%27sIdhayamThottaSamayal

 

இளநீர் பாயசம் 

https://www.youtube.com/watch?v=RtPWlvkRcxU&list=PLqzV61XhgdiPMTNYnEShLIT1mR1avfRDQ&index=3&t=162s&pp=gAQBiAQB

 

https://www.youtube.com/watch?v=2qtuAp1ddJU&list=PLqzV61XhgdiPMTNYnEShLIT1mR1avfRDQ&index=4&t=22s&pp=gAQBiAQB

 

https://www.youtube.com/watch?v=PHXNCLv5frc&list=PLqzV61XhgdiPMTNYnEShLIT1mR1avfRDQ&index=6&t=79s&pp=gAQBiAQB

 

 



Thursday, November 18, 2021

மாற்றம் முன்னேற்றம் - 65 தென்னை மரங்களும் பின்னே நானும்





என்னை வாழைப்பழ சோம்பேறி என்று சொல்வதை விடத் தென்னைமர சோம்பேறி என்று சொல்வது மிகச் சிறந்தது


இந்த 65 தென்னை மரங்களை வாங்கியபிறகு ஆரம்பகாலத்தில் பெரிதாக எந்த வேலைகளையும் செய்யவில்லை. காய்கள் கீழே விழ ஆரம்பித்தபிறகு பக்கத்து தோட்டக்காரர்கள் சொல்லித் தேங்காய் வெட்டுபவரை  கூட்டிவந்து தேங்காய் வெட்டுவதோடு  சரி. மழை வந்தால் தென்னந்தோப்புக்கு தண்ணீர் இல்லாவிட்டால் அதுவும் இல்லை.


நண்பன் கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரே ஒருமுறை 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மாட்டு எருவை கொட்டி அதன் பிறகு ஆரியம் அல்லது கேழ்வரகை போட்டுப் பார்த்தோம். கேழ்வரகு ஒன்றும் பெரிதாக வரவில்லை தன்னை மரங்கள் சிறிதளவு பலன் தர ஆரம்பித்தது.


பிறகு பெரியவர் வந்து கால்வாய்களை வெட்டித் தண்ணீரை ஒழுங்காகப் கொடுக்க ஆரம்பித்தபின்  சிறிதளவு நல்ல முன்னேற்றம்.ஒரு வெட்டு ஒன்றுக்கு  400-500 காய்களிலிருந்து இப்பொழுது எண்ணூறு காய்கள்வரை வெட்டுகின்றோம்


பிரிட்டோராஜ் சாரின் பதிவைப் பார்த்தபின்பு நாமும் ஏன் நம்முடைய தோட்டத்தில் அதை அமல்படுத்தி பார்க்கக் கூடாது என்று நினைத்தேன்
குறிக்கோள் இல்லாவிட்டால் பேருந்து பிடித்து எந்த ஊருக்கும் போக முடியாது என்பது எந்த அளவு உண்மையோ விவசாயத்தையும் என்ன எதிர்பார்க்கின்றோம் என்று தெரியாமல் ஆரம்பிப்பது அப்படியே  என்பது சொந்த அனுபவம்.


என்னுடைய எதிர்பார்ப்புகள் 

  • இந்த ஒரு வருடத்தில் வரும் தை மாதத்திலிருந்து அடுத்த தை மாதம்வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் இப்போது வெட்டும் 4000 காய்களிலிருந்து 10000 காய்கள் வெட்ட வேண்டும்.
  •  வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் கீரைகளை தோட்டத்திலிருந்து எடுக்க வேண்டும்.
  • கால்நடைகளுக்கு மற்றும் கோழிகளுக்குத் தேவையான பசுந்தீவனங்கள் மற்றும் ஏதாவது சிறு தானியங்கள் பயிரிட்டு எடுக்க வேண்டும்

செலவுகள் 

  •  தண்ணீருக்கு மின்மோட்டார் உள்ளது அதற்கான செலவுகளை இந்த ஆராய்ச்சியில் இணைக்கப் போவதில்லை.
  • இப்போது பார்த்தீனிய காடாக இருக்கும் தோப்பை ஓட்டும் செலவைச் சேர்க்க போவதில்லை
  • தேவைப்படும் ஆர்கானிக் பொருட்கள் புண்ணாக்கு போன்ற உரங்கள் உயிர் உரங்கள் மற்றும் மற்ற பூச்சி விரட்டிகளை தயாரிக்கும் செலவு ஆகியவற்றை மட்டுமே இதில் கணக்கில் சேர்க்கப் போகின்றேன்

வரவுச் செலவுக் கணக்கு

  •  தற்போது 4000 காய்கள் கிடைக்கின்றது. ஒரு காய்க்கு 10 வீதம் மொத்தம் ரூ.40,000
  •  எதிர்பார்ப்பது 10,000 காய்கள். வரவு ரூ.1,00,000 
  • இதில் காய்கறிகளையோ பசுந்தீவன செலவுகளையும் எதையும் சேர்க்கவில்லை அவை அனைத்தும் நம்முடைய மனித உழைப்புக்கான கூலியாக  எடுத்துக் கொள்கின்றேன்
  • இந்த வருடத்தில் அதிகபட்ஷமாக ரூ 40,000 செலவு செய்யப்போகின்றேன். எதிர்பார்ப்பது 1 இலட்சம். சென்ற வருடத்தைவிட ரூ.20,000 அதிகமாகப் பெற வேண்டும்

பிரிட்டோ சார் சொன்ன அனைத்தையும் ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. முதல் மாதத்தில் மூன்று விஷயங்களைச் செய்யப் போகின்றேன்.

  • மாதத்தின் முதல் நாளில் ஒவ்வொரு மரத்திற்கும் 10 மில்லி அல்லது  20கிராம் சூடோமோனஸ் தரை வழியாகத் தருவது.
  •  மாதத்தின் 11 மற்றும் 21 நாட்களில் 5 மி.லிட் மீன் அமிலம் / 10 மி.லிட் இ.எம் / 200 கிராம் அசோஸ்பைரில்லம்  / 100 கிராம் பாஸ்போபாக்டீரீயா தரைவழி பாசனத்துடன் தருவது
  •  இரண்டு மாதத்திற்கு  ஒருமுறை, ஒவ்வொரு மரத்திற்கும் மாட்டு எரு  2 கிலோவிலிருந்து 3 கிலோ வரை தருவது.

தேவைப்படுவது 

  1. சூடோமோனஸ் - 1 லிட்டர் 
  2. மீன் அமிலம்  - 350-500 மி.லிட்டர் (ஒரு முறைக்கு) - 1 லிட்டர் (இரு முறைக்கு)
  3.  இ.எம் - 500 மி.லிட்டர்
  4. 10 கிலோ அசோஸ்பைரில்லம்
  5. 6 கிலோ பாஸ்போபாக்டீரீயா
  6.  200 - 250 கிலோ மாட்டு எரு 

 

இதில் கொடுத்துள்ள அனைத்து எண்களும் ,அளவுகளும் , தொகையும் தோராய அளவுகளே. 

மழைக்கு பின் பார்க்கலாம் 

 

Best of luck to VK and KKTS Farm :-) 


மாற்றம் முன்னேற்றம் - தென்னை பராமரிப்பு -பிரிட்டோராஜ்

 தென்னை பராமரிப்பு 

 

Sebastian Britto: தென்னைக்கு(5 வருட வயதுக்கு மேல்) இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் :

1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும்.
2 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.
7 வது நாள்: ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு கரைசல் தரைவழி தரவும்.
9 வது நாள் : ஒரு மரத்திற்கு 20 மில்லி மீன் அமிலம் பாசனத்துடன் தரவும்.
16 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.
23 வது நாள்: ஒரு மரத்திற்கு 20 மில்லி இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும்.
25 வது நாள்: ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml வீதம் தரைவழி தரவும்.
[20/06, 12:16 pm] Sebastian Britto: பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்டத் தென்னைக்கு

3 மாத பராமரிப்பு:

1. தரைவழி மரத்திற்கு 20 கிராம் சூடோமோனாஸ் அல்லது விரிடி தரைவழி தரவேண்டும்.
2. வட்டப்பாத்தியில் மரத்திற்கு அரைக் கிலோ வேப்பம்புண்ணாக்கு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
3.வட்டப்பாத்தியில்  மரத்திற்கு 5 கிலோ காய்ந்த தொழுவுரம் அல்லது 2 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
4. புதுப்பாளை விடவோ அல்லது குரும்பை உதிராமலிருக்க அல்லது காய் பெருக்க போரான் சத்து கொடுக்கலாம். எருக்கு கரைசலை தரலாம்.
5. தோகையில் உள்ள கசடுகளை நீக்கலாம்,
6. 2 கிலோ வேப்பம்புண்ணாக்குடன் 2 கிலோ நிலத்தின் மண்ணை நன்கு கலந்து தென்னையின் தோகைகளுக்குள் போட்டு விட வேண்டும், இது அவசியம்.

மாதவாரியாக பராமரிப்பு:

1.மாதத்தின் முதல் நாள் மரத்திற்கு 10 கிராம் சூடோமோனாஸ் /விரிடி தரைவழி பாசனத்துடன் கலந்து கொடுக்கலாம்.
2. 3ம் நாள் மரத்திற்கு 5 மி.லிட் மீனமிலம் / 10 மி.லிட் இ.எம்/20 மி.லிட் பஞ்சகாவியா / 200 கிராம் அசோஸ்பைரில்லம் தரைவழி பாசனத்துடன் கலந்து  தரலாம்.
3. 13ம் நாள் மரத்திற்கு 5 மி.லிட் மீனமிலம் / 10 மி.லிட் இ.எம்/20 மி.லிட் பஞ்சகாவியா / 100 கிராம் பாஸ்போபாக்டீரீயா தரைவழி பாசனத்துடன் கலந்து  தரலாம்.
4. 23ம் நாள் மரத்திற்கு 5 மி.லிட் மீனமிலம் / 10 மி.லிட் இ.எம்/20 மி.லிட் பஞ்சகாவியா தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம்.

மீண்டும் அடுத்த மாதம் இதனைத் தொடரலாம்.

மண் உப்பாகவோ (PH 7.5க்கு மேல்) தண்ணீர் சப்பையாக உப்பாக( TDS 500க்கு மேல்) இருந்தால் தரைவழி மரத்திற்கு இ.எம் கரைசலை 20 மி.லிட் வரை ஒவ்வொரு பாசனத்தின் போதும் தரலாம்.

பாசனம்
மரத்திற்கு பொதுவாக 80 லிட் தண்ணீர் தருவது நலம். குறைந்தபட்சம் 15-20 லிட் களாவது தரவேண்டும். அதனுடன் இயற்கை இடுபொருள் குறைந்தபட்சமாவது கலந்து தரவேண்டும்.

மூடாக்கு முக்கியம்.குறைந்த தண்ணீர்,இடுபொருள் இருந்தாலும் மூடாக்கு இருப்பது நல்ல பெரிய பலன் தரும்.

மேலும் சந்தேகங்களுக்கு
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
9944450552

Sunday, January 20, 2019

அடுத்த பத்து வருடங்கள்


 ஒரு 1.8 ஏக்கர் நிலமும் 60 தென்னை மரங்களும் என்ன செய்யமுடியும் ? எவ்வளவு மாற்றங்களை செய்ய முடியும்?

மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் கத்திரியும் பப்பாளியும் விளைந்த நிலம். எங்களிடம் வந்தவுடன் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டோம். ஒரு முறை கம்பு மற்றும் துவரம் பருப்பு மட்டும் போட்டு , துவரம் பருப்பு மட்டும் எடுக்க முடிந்தது.

நிலக்கடலை போட்டு , போட்ட விதையை குறைவான மகசூல்.


2019 ஜனவரி தொடக்கத்தில் உள்ள நிலை இது.
1. 1.8 ஏக்கர் நிலம்
2. இரண்டு மாமரங்கள்




3. 60 தென்னை மரங்கள்
4. ஒரு முருங்கை மரம்
5. ஒரு மேட்டு பாத்தியில் சில பூசணி மற்றும் சுரைக்காய்


6. இரண்டு கிணறு
7. ஒரு 10x16 அறை

2029ல் எதிர்பார்ப்பது
1. குறைந்த பட்சம் 20 மாணவர்கள் தங்கி நீட் தேர்விற்கு தயார் செய்து , மருத்துவம் படிக்க செல்வது
2. அந்த மாணவர்கள் அனைவருக்கும் அந்நிலத்தில் இருந்தே உணவு விளைய செய்வது.
3. முடியும் போதெல்லாம் வடலூர் அணையா அடுப்பிற்க்கு பொருட்கள்
4. ஒரு பெரும் உணவு காடாக அந்நிலத்தை மாற்றுவது.
5.20 முதல் 50 பயன் தரும் விலங்குகள்
6. பேலியோ உணவை ஆதரிக்கும் கோழிகள்
7. சிறு மீன் குட்டை. கிணற்றில் மீன்கள் ஆமைகள் மற்ற நீர்வாழ் பிராணிகள்
8. சிறு மூலிகை தோட்டம்
9. மற்றும் பிற
2019ல்
1. நிரந்தர வேளாண்மையின் வாழை, பப்பாளி,முருங்கை மற்றும் தென்னை வட்டம்.
2. ஏதேனும் மூன்று தானியங்கள் விளைவிப்பது.
3. வரவு மற்றும் செலவு சமமாக இருக்குமாறு பார்த்து கொள்வது 
 
2021